Home -
அல்புனைவு

மலேசிய தமிழர்களின் மொழிக் கொடை

மலேசிய தமிழர்கள் தமிழ்மொழிக்கு அளித்துள்ள கொடைகள் ஏராளம். அண்மையில் கொரோனா கிருமிக்கு அவர்கள் அளித்துள்ள கலைச்சொல் ‘கோறனி நச்சில்’. தமிழில் உள்ள கணினி, இணையம், புலனம், செம்பனை, எண்ணெய்ப்பனை முதலிய சொற்களும் அவர்களின் அன்பளிப்பே. இதுகுறித்த ஒரு பார்வை.
 
Continue Reading →about மலேசிய தமிழர்களின் மொழிக் கொடை

மதிப்புரைகள்

ஏஜிகே எனும் போராளி

ஏஜிகே ஒரு நிலபிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழைகளின், தாழ்த்தப்பட்ட மக்களின் போராளியாக இறுதிவரை வாழ்ந்தவர். அவருடைய தீவிரவாதம் ஏற்புடையதா இல்லையா என்ற கேள்வியைக் காட்டிலும், பாசிசம் பெருகிவரும் நடப்புக் காலத்தில் இப்படியொரு புரட்சியாளர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கம் பிறப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
 
Continue Reading →about ஏஜிகே எனும் போராளி

வேளாண்மை

வேளாண்மை என்பது இறையாண்மை கிடையாதா?

இந்திய ஒன்றியத்தின் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஐக்கிய அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் ஆதரவு தெரிவித்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது. அந்நாட்டின் மாபெரும் உழவராகப் பில் கேட்ஸ் இருக்கையில் வேறு எப்படி எதிர்பார்க்க முடியும்? பன்னாட்டு நிறுவனங்களுக்காக முன்பு இந்திராகாந்தி செய்த அதே தவறை தற்போதைய அரசும் செய்கிறதா?
 
Continue Reading →about வேளாண்மை என்பது இறையாண்மை கிடையாதா?

அல்புனைவு

நவீன இலக்கியத்தில் சுற்றுச்சூழல் அவசியமா?

நவீன இலக்கியத்துக்குச் சுற்றுச்சூழல் அவசியமா? இந்தக் கேள்வி தற்காலத்திலும் எழுவது அவலமே. நவீன் இலக்கியம் பசுமை இலக்கியமாக மாற வேண்டியதின் அவசியத்தைப் பேசும் கட்டுரை.
 
Continue Reading →about நவீன இலக்கியத்தில் சுற்றுச்சூழல் அவசியமா?

மதிப்புரைகள்

மனதில் பதியும் தழும்புகள்

ஒரு வன்முறை கருவியான ‘கத்தி’ என்பது அன்பின் கருவியாக மாறும் அற்புதத்தை நிகழ்த்தும் சிறுகதைகள். ஒரு புதியவகை ஆப்பிரிக்க எழுத்தை அறிமுகப்படுத்தியதன் வழி தமிழுக்கு நல்ல மொழிப்பெயர்ப்பொன்றை வழங்கியுள்ளார் லிங்கராஜா வெங்கடேஷ். . .
 
Continue Reading →about மனதில் பதியும் தழும்புகள்

வேளாண்மை

பஞ்சாப் உழவர்களும் டெல்லிப் புகையும்

“நீங்கள் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா?”

“ஆமாம்”

“டெல்லியின் காற்றுமாசை ஆதரிக்கிறீர்களா?

“இல்லை”

“பஞ்சாப் விவசாயிகள்தான் டெல்லியின் காற்றுமாசுக்குக் காரணம். அந்தச் செயலுக்குத் தண்டம் விதித்தால் அதை நீக்கச் சொல்லிப் போராடுகிறார்களே. இது நியாயமா?”

“நியாயம்தான். ஏனெனில் அந்தத் தண்டத்தை உண்மையான குற்றவாளியான ‘மான்சாண்ட்டோ’ நிறுவனத்துக்கு அல்லவா விதிக்க வேண்டும்?”

 
Continue Reading →about பஞ்சாப் உழவர்களும் டெல்லிப் புகையும்

மதிப்புரைகள்

விரிசல் கண்ணாடியில் உருக்குலையும் பிம்பங்கள்

கோட்பாடு (மேற்கு) X அனுபவம் (கிழக்கு) என்பதை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு கோட்பாடு (பார்ப்பனர்கள்) X அனுபவம் (சூத்திரர்கள்) என்று மாற்றியமைத்து தம் விசாரணையை மேற்கொள்கின்றனர் கோபால் குரு மற்றும் சுந்தர் சருக்கை. இதுவரை எல்லா சமூக அறிவியலாளர்களும் போற்றிக்கொண்டிருந்த வறட்டு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய இந்நூல் அவர்களைக் கட்டாயப்படுத்தும்.
 
Continue Reading →about விரிசல் கண்ணாடியில் உருக்குலையும் பிம்பங்கள்

மதிப்புரைகள்

மண் பொம்மையாக மாறிய சமூகத்தின் கதை

ஒரு வரலாற்றுப் புதினம் என்றால் பொதுவாக மன்னர் அல்லது அரசை மையமாக வைத்து எழுதப்படுவதே வழக்கம். மாறாக, ஒரு தொழில்நுட்பத்தை மையமாக வைத்து தீட்டப்பட்ட வரலாற்றுப் புதினமே ‘‘புனைபாவை’.
 
Continue Reading →about மண் பொம்மையாக மாறிய சமூகத்தின் கதை

காடோடி பதிப்பகத்தின் புத்தகங்கள்