Home -
என் நூல்கள்

நீர் எழுத்து நூலில் இருந்து – 5

நீர் எழுத்து’ நூலுக்காக கள ஆய்வில் ஈடுப்பட்டிருந்த நேரம். ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டு பழமையான பழந்தமிழரின் நீர்க் கட்டுமானத்தின் தற்போதைய நிலைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன். அதுபற்றிய தகவல் நூலில் இருந்து…
 
Continue Reading →about நீர் எழுத்து நூலில் இருந்து – 5

என் நூல்கள்

நீர் எழுத்து நூலில் இருந்து – 4

புவியில் இருந்து நிலவுக்கு 64,000 முறை நடந்து சென்று வர முடியுமா? என்று கேட்டால் முடியாது என்று பதில் சொல்வோம். ஆனால் இந்திய ஒன்றியம் முழுவதிலும் உள்ள நம் பெண்கள் அவ்வளவு தொலைவுக்குப் நடக்கிறார்கள். ஆனால் அது நிலவை நோக்கிய நடையல்ல; நீரை நோக்கிய நடை. ஆண்டு முழுதும் நீருக்காக நம் பெண்கள் அவ்வளவு தொலைவு நடக்கிறார்கள்
 
Continue Reading →about நீர் எழுத்து நூலில் இருந்து – 4

மனிதர்கள்

சந்தோஷ் எனும் கலைஞன்

ஓவியர் சந்தோஷ் நாராயணனைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரை முதலில் சந்தித்தபோது அவரிடம் பேசவில்லை. ஏனென்றால் அவர்தான் சந்தோஷ் என்று தெரியாது. தஞ்சை செங்கிப்பட்டி செம்மை வனத்தில் சுவரோவியம் வரைந்துக் கொண்டிருந்தார். அவர் வரைவதை வேடிக்கைப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.
 
Continue Reading →about சந்தோஷ் எனும் கலைஞன்

அரசியல்

காட்டுத் தீயல்ல – பல்லுயிரியப் படுகொலை

காடோடி நாவலில் வரும் ‘போர்னியோ’ காட்டின் கலிமந்தான் பகுதி அமேசான் போலவே பற்றி எரிகிறது. வழக்கம் போலவே ‘சைம் டெர்பி’ எனும் செம்பனை எண்ணெய் பொருட்கள் நிறுவனத்தின் மீது அய்யம் எழுந்துள்ளது. இடம் மாறினாலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கம் மட்டும் மாறுவதில்லை. நாஜியிசம், ஃபாசிசம் போல பிரேசில் அதிபரின் பெயரால் ‘போல்சோனரோவிசம்’ என்கிற புதிய கொள்கைத் தோன்றியுள்ளது. இது இந்திய ஒன்றியத்திலும் வேறு வகையில் பரவி வருகிறது.

இனப்படுகொலையோடு பல்லுயிரியப் படுகொலைகளையும் நிகழ்த்தும் இப்போக்கு குறித்து அண்மையில் ஆனந்த விகடனில் எழுதிய இக்கட்டுரையை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன். அமேசான் ஆனாலும் போர்னியோ ஆனாலும் காட்டுத் தீயின் பின்னேயுள்ள அரசியல் ஒன்றுதான்.

 
Continue Reading →about காட்டுத் தீயல்ல – பல்லுயிரியப் படுகொலை

பொது

பெரியாரின் தாடியைப் பிடித்து இழுத்தேன்

பெரியாரின் மடியில் அமர்ந்துள்ள குழந்தை யார் என்று தெரிகிறதா? ஆம், நானேதான். 1964-ல் எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தின் பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.
 
Continue Reading →about பெரியாரின் தாடியைப் பிடித்து இழுத்தேன்

பொது

இந்தியை ஏன் மறுக்கிறோம்?

அமித்ஷா, ஒரு புதிய பெவிகால் பசையைக் கண்டுபிடித்துள்ளார். இந்தி என்கிற அந்தப் பசையைக் கொண்டு ஒட்டினால் இந்தியாவை ஒட்டிவிடலாம் என்பதே அவர் கண்டுபிடிப்பு. இதன் மூலம் அவர் இந்தியா இன்னும் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் துண்டுகளாகவே கிடக்கின்றன என்கிற உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.. அதற்காகவே அவரைப் பாராட்டலாம்.
 
Continue Reading →about இந்தியை ஏன் மறுக்கிறோம்?

காடோடி பதிப்பகத்தின் புத்தகங்கள்