Home -
மதிப்புரைகள்

சொல் வெளித் தவளைகள்

கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும் மனநிலை வந்தால் வேறெதையும் வாசிக்க இயலாது. அதேசமயம் எப்போதும் எதையாவது ஆய்வு செய்யும் மனநிலையில் இருப்பதால் கவிதைகளை வாசிக்கும் நேரமும் வாய்க்காது. அண்மையில் நம்பிக்கைக்குரிய கவிஞர்கள் பலர் உருவாகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரையும் பற்றி எழுதவே ஆசை. வாய்ப்பு கிடைக்கும்போது படித்தவற்றைப் பற்றி எழுதுகிறேன். தற்போது றாம் சந்தோஷ் எழுதிய ‘சொல் வெளித் தவளைகள்’.
 
Continue Reading →about சொல் வெளித் தவளைகள்

இயற்கை

அன்புள்ள மனிதக் குலத்துக்கு, அமேசான் எழுதும் கடிதம்

நீர் என்பது புல்லின் பசி; புல் என்பது மானின் பசி; மான் என்பது புலியின் பசி. இப்படி ஒவ்வொரு பசிக்கும் உலகில் உணவுண்டு, மனிதரின் பசியைத் தவிர. மனிதரின் பசி என்பது பேராசை. பேராசை என்பது பெருந்தீ. அந்தத் தீயே இன்று என்னை எரித்துக் கொண்டிருக்கிறது.
 
Continue Reading →about அன்புள்ள மனிதக் குலத்துக்கு, அமேசான் எழுதும் கடிதம்

பொது

SRV பள்ளி சமூக நோக்கு விருது

‘அறிஞர் போற்றுதும், அறிஞர் போற்றுதும்’ என்ற தலைப்பில் திருச்சி எஸ்ஆர்வி பள்ளியின் பத்தாம் ஆண்டு ‘தமிழ் விருது’ நிகழ்வில் ‘சமூக நோக்கு’ விருது தந்தமைக்கு என் நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Continue Reading →about SRV பள்ளி சமூக நோக்கு விருது

பொது

பூவும் பாடலும்: மல்லிகை என் மன்னன்

இப்பாடல் நமது சுமங்கலிப் பெண்களின் ‘தேசிய கீதம்’. வாலியின் இப்பாடலை வாணி ஜெயராம் வேறு தன் பூந்தேன் குரலில் பாடி வைத்துவிட்டுப் போய்விட்டார். இப்பாடலைக் கண்ணாடி முன் பாடி ஒத்திகைப் பார்த்த பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. ஆனால் மல்லிகை தமிழ்நாட்டு மலரல்ல என்கிற ஆர்வமூட்டும் தகவலை கொஞ்சம் அலசலாமா?
 
Continue Reading →about பூவும் பாடலும்: மல்லிகை என் மன்னன்

பொது

பூவும் பாடலும்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே…

மிருதங்கத் துடிப்பில் தொடங்கும் ஒவ்வொரு தட்டுக்கும் இதயத்துடிப்பு எகிறி உச்சத்துக்குச் செல்ல, அதை எஸ்.ஜானகியின் குரலில் ‘ஹம்மிங்’ வார்த்து தணிக்கும் இளையராஜாவின் சித்துவேலை இப்பாடல். காதலுக்கு சாதி இருப்பது போல் தாமரையிலும் சாதி புகுத்தப்பட்டு தமிழக வரலாற்றில் மோதல் நடந்ததை ஒப்பிட்டு பேசுகிறது இப்பகுதி.
 
Continue Reading →about பூவும் பாடலும்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே…

பொது

பூவும் பாடலும்: பூவரசம் பூ பூத்தாச்சு

பூவரசம் பூத்ததும் பெண்ணுக்கு சேதி வருவதும் நாட்டார் நம்பிக்கை. நமக்கு பூவரசம் பீப்பியோடும், அதன் பம்பரக் காயோடும், பூவரசு இலைக் கொழுக்கட்டையோடும் கட்டாயம் தொடர்பிருக்கும். பூவரசம் பூதான் சங்க இலக்கியத்தில் வரும் வஞ்சி என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? அது குறித்த சுவையான ஓர் ஆய்வுப் போராட்டம்…
 
Continue Reading →about பூவும் பாடலும்: பூவரசம் பூ பூத்தாச்சு

பொது

பூவும் பாடலும்: செந்தாழம்பூவில் வந்தாடும்…

தாழம்பூவில் இருவகைகள் உண்டு. ஒன்று வெண் தாழம்பூ, மற்றொன்று செந்தாழம்பூ. பொதுவாக தாழம்பூ என்றால் அது வெண் தாழம்பூதான். கண்ணதாசன் ஏன் தாழம்பூ என்று பாடாமல் செந்தாழம்பூ என்றார்?
 
Continue Reading →about பூவும் பாடலும்: செந்தாழம்பூவில் வந்தாடும்…

பொது

பூவும் பாடலும்: செந்தூரப்பூவே… செந்தூரப்பூவே…

பதினாறு வயதினிலே படப்பாடலான ‘செந்தூரப்பூவே’ பாடலில் பின்னணியில் வரும் பூக்களுக்கும் ‘காவி’க்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு. செந்தூரப்பூ என்ற பெயர் தவறாக இருந்தாலும் அதன் உண்மைப் பெயர் சென்னை புரசைவாக்கத்தில் ஒளிந்துள்ளது. இப்படி பல ஆர்வமூட்டும் செய்திகளை திரைப்பாடல்களின் வழியே அணுகும் புதிய தொடர் இது…
 
Continue Reading →about பூவும் பாடலும்: செந்தூரப்பூவே… செந்தூரப்பூவே…

மதிப்புரைகள்

சுளுந்தீ பற்ற வைக்கும் – ‘தீ’

சனாதனப் பண்பாட்டுக்கு ஆதரவாகக் கட்டமைக்கப்பட்ட கதையாடல்களைத் தலைகீழாகக் கவிழ்த்து எழுதப்பட்டுள்ள எதிர்வரலாறே ‘சுளுந்தீ’. ‘பண்டிதர்’ நிலையிலிருந்து ‘முண்டிதர்’ நிலைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய இந்த அரிய ‘ஆவண நாவல்’ தமிழுக்குக் கொடை. இரா.முத்துநாகு ஒரு ‘தீக்கொளுத்தி’யாய் நின்று ‘சுளுந்தீ’யைத் தந்துள்ளார். இது பற்றவைக்கப் போகும் நெருப்பு தமிழக வரலாற்றின் பிற இருண்ட பக்கங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரட்டும்!
 
Continue Reading →about சுளுந்தீ பற்ற வைக்கும் – ‘தீ’

காடோடி பதிப்பகத்தின் புத்தகங்கள்